
அருகில் உள்ள கடைமலைப்பற்று ஊரில் கண்டுபிடித்துள்ளது.
இதுவரை,இத்தகைய பழமையான இயக்கிச் சிற்பம் தமிழகத்தில் கண்டுப்பிடிக்கப்படவில்லை.
இச் சிற்பம் 150 செ.மீ. உயரம்,44.5 செ.மீ. அகலம் உடையது.இயக்கியின் வலப்பக்கத்தில் பணிப் பெண் ஒருத்தி ஆபரணப் பேழையைச் சுமந்திருக்கும் நிலையிலும், இடப்பாகத்தில் மற்றொரு பணிப் பெண் குடத்தை தலையில் சுமந்த நிலையிலும் நிற்கின்றனர்.இருவரது தலையிலும் சிம்மாடு போன்ற
தலையணியன் மீதே மேற்காணும் பேழையும் குடமும் காணப்பெறுகின்றன.பணிப்பெண்களும்
இருகரங்களையே கொண்டுள்ளனர்.இவ்விரு பணிப்பெண்களோடும் இயக்கி உருவத்தைப்
பார்க்கையில் தம்மை வழிபடும் மக்களுக்கு வளம் சேர்க்கும் வளமைத் தெய்வமாக இது
வழிபடப்பட்டிருக்குமோ என்னும் ஐயத்தை ஏற்படுத்துகிறது.தமிழகத்தில் இயக்கி உருவம்
சமணசமயத்தைச் சார்ந்ததாகவே கருதப்படுகிறது.
தமிழ் இலக்கியங்களில் சிலப்பதிகாரத்தில்தான் முதன்முதல் இயக்கியைப் பற்றிய தெளிவான குறிப்பு காணப்படுகிறது.இதில் "பூங்கணி இயக்கி" என்று பேசப்படுகிறது.மதுரையின் கீழ்திசையில் "புறஞ்சிறை மூதூரி" பகுதியில் பூங்கணி இயக்கிக் கோயில் இருந்ததாகவும் ஆயர்பாடியைச் சேர்ந்த மாதரி என்ற ஆயர் முதுமகள் இத் தெய்வத்தை வழிபட்டாள் என்றும் சிலம்பில் அடைக்கலக் காதை வரிகள் உணர்த்துகின்றன.
ஆதலால்,கி.பி.5_6_ம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே இயக்கி வழிபாடு தமிழகத்திலிருந்து வந்திருப்பதை உணரலாம்,இதன் அடிப்படையிலும் மற்றும் கி.மு.2_ம் நூற்றாண்டைச் சேர்ந்த அமராவதி இயக்கி
சிற்பத்தின்,உருவ அமைதி கொண்டும் காண்கையில் மலைப்பற்று இயக்கி நிச்சயமாக கி.பி.5_6_ம் நூற்றாண்டையோ அல்லது அதற்குச் சற்று முந்தைய காலத்தையோ சார்ந்ததாகலாம்.
இவ்வியக்கி சிற்பத்துக்கு வடக்கிலும் தெற்கிலும் ஒவ்வொறு ஐயனார் சிற்பம் காணப்படுகிறது.வடப்பாகத்திலிருப்பது கி.பி.6_7_ம் நூற்றாண்டையும் இடப்பக்கத்திலிருப்பது கி.பி.7_8_ம் நூற்றாண்டையும் சேர்ந்ததாக இருக்கலாம்.இவை தமிழ் நாட்டில் கிடைத்துள்ள பிற ஐயனார் சிற்பங்களிலிருந்து மாறுபட்ட கூறுகளைக் கொண்டு தோற்றமளிக்கின்றன.
வடபால் உள்ள ஐயனார் சர்வாங்காசனத்தில் இருகால்களையும் மடக்கி ஒன்றோடு ஒன்றைக் குறுக்காக வைத்து அமர்ந்த நிலையில் காணப்பெறுகிறது.வழக்கத்துக்கு மாறாக வலக்கையில் குறுவாள் ஏந்தி ,கையை மடக்கி மார்போடு அணைத்த நிலையிலும் இடக்கையும் மடக்கி மார்போடு சேர்த்து குறுவாளைத் தொடும் நிலையில் விரல்களை விரித்தும் உள்ளன.இடையில் பிடியுடன் கூடிய குறுவாள் இடையாடைக் கட்டில் செருகி வைக்கப்பட்டிருக்கிறது. இடைக்கட்டு ஆடையின் இரு நுனிகள்
இருபக்கங்களிலும் தொங்குகின்றன.இத் தோற்றம் ஐயனார் உருவத்தில் இதுவரை பார்க்காதது.
இயக்கி சிற்பத்தின் தென்பால் உள்ள மற்றொரு ஐயனார் சிற்பமும் அமர்ந்த நிலையிலேயே உள்ளது.ஆனால் வலக்கால் குத்திட்டு வைத்து இடக்கால் மடித்து ஆசனத்தில் படுக்கையாக
வைத்தவாறு மற்ற ஐயனார் உருவங்களில் உள்ளவாறு காணப்படுகின்றன.வலக் கையை மடித்து
மலர் ஒன்றை ஏந்தி மார்போடு சேர்த்துள்ளவாறும் இடக்கை தொங்கும் கரமாகத் தொடைக்கருகில் வைத்துள்ளவாறும் காட்சியளிக்கின்றன.ஒரு காதில் மகர குண்டலமும்,மற்றொரு காதில் மலர் செருகியிருப்பது போன்றும் தெரிகின்றன.இவ்வுருவத்தில் வலக்கரம் அமைந்திருக்கும் முறை புதுமையாக உள்ளது.ஐயனாரின் இடையில் குருவாள் செருகப்பட்டுள்ளது.இந்த ஐயனாருக்கு வலப்பக்கத்தில் வாலை உயர்த்திச் சுருட்டிக் கொண்டு நிற்கும் நிலையில் உள்ள நாய் உருவம் காணப்படுகிறது.ஐயனாருக்குப்
பக்கத்தில் நாய் உருவம் காணப்பெறுவது தொன்று தொட்டு வரும் மரபாகும். தொடக்கத்தில்
ஐயனாருக்கு உற்ற தோழனாக நாய் இருந்தது என்றும் பிற்காலத்தில் வாகனமாக குதிரை,யானை
சேர்க்கப்பட்டிருக்கிறது என்றும் அறிய முடிகிறது.
சமண மதத்தினருக்கு மட்டும் உரிய தெய்வமாக விளங்கியபோது ஐயனாருக்கு அருகில் நாய் மட்டுமே இருந்தது.அனைத்துத் தரப்பு வணிகர்களின் தெய்வமாக ஐயனாரை வழிபடத் தொடங்கியபோது குதிரையும், அத்திகோசத்தார் என்ற சிறப்பு வணிகப்படையினர் வணங்க முற்பட்ட நாளிலிருந்து யானையும் ஐயனாரின் வாகனமாகச் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்றும் கருத இடமேற்படுகிறது.
அச்சிறுபாக்கம் பல்கலை வித்தகர் கல்வெட்டு ஆய்வாளர். தாமரைக்கண்ணன் அவர்களுடன்
நடன.காசினாதனும் தொல்பொருள் ஆய்வுத் துறை பதிவு அலுவலர் மா.சந்திரமூர்த்தியும் சிற்பங்களை நேரில் பார்த்து சிற்பத்தின் பெயர்,காலம் ஆகியவற்றை முடிவு செய்தனர்.
தினமணி 19.1.1999