தாமரைக்கண்ணன்

“பலருடைய முன்னேற்றங்களைப் பார்க்கும்போது, நான் ஒன்றுமே செய்யவில்லை என்பதுபோல தோன்றுகிறது. ஆனால், நான் எழுதிய ஒவ்வொரு எழுத்தும் என் கையால் நானே எழுதியது என்ற பெருமிதம் ஏற்படுகிறது. எனது படைப்புகள் அனைத்தும் காலத்தை வென்று நிற்ககூடியவை இது உறுதி!”

அறிமுகம்

வாழ்க்கை குறிப்பு

எழுத்தாளர், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கட்டுரையாளர், பேச்சாளர், எனப் பல களங்களில் இயங்கியவர். தாமரைக்கண்ணன், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆட்சிப்பாக்கம் என்ற கிராமத்தில், மா.வீராசாமி – வீ.பாஞ்சாலி அம்மாள் இணையருக்கு ஜூலை 7, 1934 அன்று பிறந்தார். தந்தை ஆசிரியராகப் பணி புரிந்தார். அவர் மூலம் புத்தக வாசிப்புப் பழக்கம் வளர்ந்தது. எழுத்தார்வம் சுடர் விட்டது.

உயர்நிலைக் கல்வியைச் சென்னையிலும், ஆசிரியர் பயிற்சிக் கல்வியைத் திருவள்ளூரிலும் பயின்றார். சென்னைப் பல்கலையிலும், அண்ணாமலைப் பல்கலையிலும் பயின்று இளங்கலைப் பட்டம் பெற்றார். தொடர்ந்து 1984-ல் சென்னைப் பல்கலையில் தமிழ் இலக்கியத்தில் முதுகலைப்பட்டம் பெற்றார். காஞ்சிபுரம் மாவட்டம், பொன்னேரியில் உள்ள மாவட்டக் கழகக் கலப்புப் பள்ளியில் (06.09.1954) ஆசிரியராகப் பணியைத் தொடங்கினார். பணியில் இருக்கும் போதே எழுத்துத் துறையில் காலூன்றத் தொடங்கினார்.

முதல் படைப்பு ‘மங்கையர்க்கரசிக்கு’ என்ற தலைப்பில், 22.01.1957 தேதியிட்ட சௌபாக்கியம் இதழில் வெளியானது. தொடர்ந்து பல இதழ்களுக்கும் எழுதத் ஆரம்பித்தார். எழில், அன்பெழிலன், கண்ணன், யாரோ, அம்சா, ஜனநாதன், பாஞ்சாலி மகன், அச்சிறுபாக்கத்தார், அகரத்தான், தாமரை எனப் பல்வேறு புனை பெயர்களில் எழுதினார். ஜூலை 3, 1958 பத்மாவதியைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நான்கு மகன்கள்; ஒரு மகள்.

ஆரம்பக்கல்வி, அமுதசுரபி, மாலை முரசு, ராணி, குயில், பிரசண்ட விகடன், தேவி, சுதேசமித்திரன், காதல், காஞ்சி, போர்வாள், குண்டூசி, தினத்தந்தி, தினமலர், தினமணி சுடர் எனப் பல இதழ்களில் இவரது சிறுகதைகள் வெளியாகியுள்ளன. 88 சிறுகதைகள் எழுதியுள்ளார். நாடகங்கள் 17. சென்னை, திருச்சி மற்றும் புதுவை வானொலியில் இவரது 15 நாடகங்கள் ஒலிபரப்பாகி உள்ளன. சிறுகதை, நாவல், நாடகம், வரலாறு, கல்வெட்டு ஆய்வு, குழந்தை இலக்கியம் என 52 நுால்கள் எழுதியுள்ளார். 19.01.2011-ஆம் ஆண்டு சிறுநீரக கோளாறு காரணமாக மறைந்தார்.

நூல்கள்

கல்வெட்டு ஆய்வுகள் சில...

காஞ்சிபுரம் மாவட்டம் ஆலத்தூர் கிராமத்தில் சோழர் கால கோயிலும்,கற்சிலைகளும் கண்டெடுக்கப்பட்டன.இது குறித்த விவரம்:….மேலும்
காஞ்சிபுரம் மாவட்டம்,உத்திரமேருர் மானாம்பதிக்குத் தெற்கே ஏழு கி.மீ.,தொலைவில் உள்ளது ஆலத்தூர்.இக்கிராமத்தில் இடிபாடுகளுக்கு இடையில் ஒரு சிவன் கோயில் மண்முடிக் கிடந்தது.சிவலிங்கத்தின் தலைப் பகுதி மட்டும் ஓரங்குலம் வெளியே தெரிந்தது.இத்தகவலை ஸ்ரீராமலு மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் அச்சிறுபாக்கம் கல்வெட்டு ஆய்வாளர் தாமரைக்கண்ணனினுடம் கூறினர். இதையடுத்து ஆலத்தூர் கிராமம் சிவன் கோயிலில் அவர் களப் பணி மேற்கொண்டார்.ஊரார் திருப்பணி செய்ய மண்மேட்டை அகற்றிய போது பதினாறு தாமரைஇதழ்களைக் கொண்ட ஆவுடையார் மீது பெரிய லிங்கம் இருப்பது தெரிய வந்தது,அத்துடன் பூமிக்கடியில் இருந்து பிரம்மா,ஆறுமுகன்,நந்தி,கொற்றவை சிலைகளும் முழுமையாக எடுக்கப்பட்டது.மகிடனின் தலை மீது நிற்கும் கொற்றவை நான்கு கைகளுடனும் பிரயோகச் சக்கரத்துடனும் காட்சி அளிக்கிறாள். சிதிலம் அடைந்திருக்கும் முன் மண்டபத்தில் ராசராசன்,ராசேந்திரன் காலத்திய உருள்துண்கள் காணப்படுகின்றன.லிங்கமும் சிலைகளும் சோழர்கலைப் பாணியுடன் அமைந்துள்ளன.இத்தகவல் தாமரைக்கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தினமலர் சென்னை 9.11.2002

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் அச்சிறுபாக்கத்தை அடுத்து, கிழக்கே சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இந்தளூர் என்னும் சிற்றூரில்

ஒரு புதிய வகை கல்வெட்டு காணப்பட்டது. ஏழாம் நூற்றாண்டில் வழங்கிய தமிழ் வட்டெழுத்துக்கள்

நட்டுவைக்கப்பட்டிருந்த (சுமார் மூன்றரை அடி உயரம் ஒன்றரை அடி அகலம்) ஒரு பலகைக் கல்லில் காணப்பட்டது, அரிய கண்டுபிடிப்பாகும்.அதில் உள்ள தமிழ் எழுத்துக்கள், செங்கற்பட்டு மாவட்டத்தில் வேறு எங்கும் காணப்படாதவை.இதற்கு முன் செங்கற்பட்டு நகரத்தில் அத்தகைய எழுத்துக்கள் உள்ள கல்,ஏதோ ஒரு தெருவில் இருந்ததாகவும், பின்னர் அது சென்னை மியூசியத்தில் வைக்கப்பட்டதாகவும் தெரிகிறது. ஒரு பறவைக்கான நடுகல்லில் சுமார் ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் எழுத்துகளும் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அந்த (கோழிப்) பறவை நடுகல்லின் பின்புறம் சுமார் 200 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் கல்வெட்டு ஒன்றும் காணப்படுகிறது. அது தேய்ந்து சிதைந்து போயிருப்பதுடன் பிற்காலத்தியதாகவும் உள்ளது. தற்போது புதிதாகக் கட்டப்பெற்றுள்ள செங்கழுநீர் விநாயகர் கோயிலுக்கு எதிரில் மூன்று தெருக்கள் சந்திக்கும் இடத்தில் நட்டு வைக்கப்பட்டிருக்கிறது இந்த நடுகல். போலாரம்மன் திருவிழா இந்த நடுகல்லின் அருகில்,ஆண்டு தோறும் புதிதாக சிறுகுடில் அமைத்து, போலாரம்மன் என்னும் மண் பாவை உருவம் செய்து, பொங்கல் வைத்து, பூசையிட்டுப் படையல் போட்டு நாள் முழுதும் விழாக் கொண்டாடி,அன்றைய மாலையே மண்பாவையை (போலாரம்மனை) ஊர் தூரத்தே உள்ள குளத்திற்கு எடுத்துச் சென்று நீரில் கரைத்து விடுவார்கள்.இதை “போலாரம்மன் திருவிழா” என்று ஊரார் கூறுகின்றனர். ஒரு வேளை ..”சேவலார் அம்மன்” என்பது , “சேலாரம்மன்” என்று ஆகி நாளடைவில் “போலாரம்மன்” என்று வந்திருக்குமோ என்பது தெரியவில்லை.போலாரம்மா,போலா ரெட்டியார் என்று சிலர் தங்கள் பெயர்களை வைத்துக் கொள்வதுடன், போலாரம்மனைக் குலதெய்வமாகவும் வழிபடுவதால், இந்த நடுகல்லுக்கும் அந்த இடத்தில் கொண்டாடப்படும் அதே விழாவுக்கும் தொடர்பு இருக்க வழியில்லை என்று எண்ணத்தோன்றுகிறது. செய்தி தெரிந்தவர்க ள் “போலாரம்மன்” என்பது பற்றி விளக்கமாக ஆராய்வது அவசியம்.பறவைக்காக எடுக்கப்பட்டுள்ள அந்த நடுகல்லில் அழகிய சேவல் ஒன்று வீரம் செரிந்த தோற்றத்துடன் நிற்கிறது. மெலிந்த அழுத்தமான உடலும் , நிமிர்ந்த கொண்டையும், அழகிய அடர்த்தியான வாலும் அதன் தோற்றப் பொலிவை நன்கு வெளிப்படுத்துகின்றன.வலிமையான நீண்ட கால்களை சேர்த்து ஊன்றிக் கொண்டு அது நிற்பதையும், இறக்கையை உடலோடு ஒட்டிக்கொண்டு கழுத்தை நிமிர்த்தியுள்ள வேகத்தையும் , கொண்டையை உயர்த்தி சிலிர்த்துக் கொண்டு, அது கூர்மையாகப் பார்ப்பதையும், உற்று நோக்கினால் (போற்களத்தில் பகைவனை வீழ்த்திவிட்டுப் பெருமிதக் கோலத்தோடு நிற்கும் ஒரு வீரனைப் போல்) அது கண்களிலும் பார்வையிலும் வீரத்துடனும் வெற்றிப் பெருமிதத்துடனும் நிற்பது நன்கு புலனாகிறது. பகைக் கோழியை அது வெற்றிக் கொண்டு, அதன் வயிற்றைக் கீறி, அதன் உடலை கொத்தி இறகுகளைத் தன் அலகினால் கொத்து கொத்தாக இழுத்து தலையை ஆட்டுகிறது போலும். அந்தச் சேவலின் மேற்புறத்தில் “கீழ்சேரிக் கோழி பொடு கொத்த” என்ற (1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட) தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. பொதுவாக பண்டைத் தமிழ் நாட்டில் போரில் பகைவரை வென்று உடல் முழுதும் விழுப் புண்பட்டு வீரமரணம் எய்திய போர் வீரனுடைய பீடும் பெருமையும் விளங்கும் வண்ணம், அவனுக்கு நடுகல் எடுப்பது வழக்கம். சமீபத்தில் ஜப்பான் நாட்டில் நன்றி விசுவாசம் நிறைந்த ஒரு நாய்க்குச் சிலை அமைத்ததைப் படித்திருக்கிறோம். தினமணி 13.11.1977

சென்னை,ஏப்,3 _ செய்யூர் தாலுக்கா ஈசூரில் ஆயிர‌த்து 300 ஆண்டுக‌ளுக்கு முந்தைய‌ விஷ்ணு சிற்ப‌ம் க‌ண்டுபிடிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

த‌மிழ்நாடு தொன்மை இய‌ல் ஆய்வு நிறுவ‌ன‌ம், காஞ்சிபுர‌ம் மாவ‌ட்ட‌ம் ,செய்யூர் வ‌ட்ட‌ம் ,
ஈசூர் என்னும் ஊரிலிருந்து ப‌ல்ல‌வ‌ர் கால‌ விஷ்ணு ம‌ற்றும் தாய்மார் எழுவ‌ரில் ஒருவ‌ரான‌ மாகேசுவ‌ரி சிற்ப‌ங்க‌ளையும் , நெற்குன்ற‌த்திலிருந்து ச‌ம‌ண‌த் தீர்த்த‌ங்க‌ர‌ர் சிற்ப‌த்தையும், வெண்மால் அக‌ர‌த்திலிருந்து பிற்கால‌ச் சோழ‌ர்கால‌த் திருமால்,தேவி,பூதேவிச் சிற்ப‌ங்க‌ளையும் ‌கண்டுபிடித்துள்ள‌து. மேற்காணும் நிறுவன‌ அமைப்பாள‌ர்க‌ள் ப‌ல்க‌லைச் செல்வ‌ர் தாம‌ரைக்க‌ண்ண‌ன்,
ந‌ட‌ன‌ காசிநாத‌ன்,முத்து எத்திராச‌ன் ஆகியோர் மேற்கொண்ட‌ க‌ள‌ ஆய்வுப் ப‌ணியின் போது இவை இருப்ப‌து தெரிய‌வ‌ந்த‌து.ஈசூர், தொழுப்பேட்டிலிருந்து 11 கி.மீ., தொலைவில் தென்கிழ‌க்கு திசையிலும் ,சூணாம்பேட்டிலிருந்து வ‌ட‌மேற்குத் திசையிலும் அமைந்துள்ள‌து.முன்பொருமுறை இவ்வூர் குள‌த்திலிருந்து சோழ‌ர் கால‌த்திய‌ சில‌ செப்புத் திருமேனிக‌ளும்
க‌ண்டெடுக்க‌ப்ப‌ட்ட்டிருக்கின்ற‌ன‌. த‌ற்போது இவ்வூரின் தெற்குத் திசையில் உள்ள‌ செம்பாத்த‌ம்ம‌ன் கோயில் என்று வ‌ழ‌ங்க‌ப்பெறும் இட‌த்திலிருந்து ப‌லாவ‌ர் கால‌ அரிய‌ விஷ்ணு சிற்ப‌ம்
க‌ண்ட‌றிய‌‌ப்ப‌ட்டிருக்கிற‌து.
இச்சிற்ப‌ம் மாம‌ல்ல‌புர‌ம் ஆதிவ‌ராக‌க் குடைவ‌ரைக் கோயில் புடைப்புச் சிற்ப‌ங்க‌ளின்
க‌லைபாணியில் தோற்ற‌ம் த‌ருகிற‌து. ஆத‌லால் இது கி.பி.,7ம் நூற்றாண்டைச் சார்ந்த‌து என்று திட‌மாக‌க் கூற‌லாம். இட‌து காலை இருக்கையில் குத்திட்டு வைத்து, வ‌ல‌க்காலைத் தொங்க‌விட்ட‌ நிலையில் கொண்டு இட‌க்க‌ர‌த்தில் ம‌ல‌ர் ஏந்தி வ‌ல‌க்க‌ர‌த்தால் ஆச‌ன‌த் தொட்ட‌வாறு அம‌ர்ந்த‌ நிலையில் காட்சி த‌ரும் மாகேசுவ‌ரியும் இதே கால‌த்தைச் சேர்ந்த‌தாகும்.
இச்சிற்ப‌ங்க‌ளுக்கு அருகில் ப‌ல்ல‌வ‌ர் காலத்திய‌ ம‌ற்றொரு நிற்கும் திருமால் சிற்ப‌மும் ,நாய‌க்க‌ர் கால‌ குறுநில‌த்த‌லைவ‌ன், த‌லைவி புடைப்புச் சிற்ப‌ங்க‌ளும் காண‌ப்ப‌டுகின்ற‌ன‌.திருமாலின் த‌லைப்ப‌குதி உடைந்து, காண‌ப் பெறாத‌ நிலையிலுள்ள‌து.
தொழுப்பேட்டிலிருந்து 8 கி.மீ., தொலைவிலுள்ள‌ நெற்குன்ற‌ம் என்ற‌ ஊரில் உள்ள‌ தீர்த்த‌ங்க‌ர‌ர் சிற்ப‌ம்,இருகால்க‌லையும் ம‌ட‌க்கி ஒன்ற‌ன் மீது ஒன்றாக‌ப் பிணைந்து வைத்து யோகாச‌ன‌ நிலையில் அம‌ர்ந்து காண‌ப்ப‌டுகிற‌து.இருக‌ர‌ங்க‌ளின் உள்ள‌ங்கைக‌ளையும் ஒன்ற‌ன் மீது ஒன்றாக‌ வைத்து , க‌ண் இமைக‌ளை மூடி ஆழ்ந்த‌ தியான‌ நிலையில் இருப்ப‌தாக‌க் காட்ட‌ப்பெற்றிருக்கிற‌து. தீர்த்த‌ங்க‌ரின் இருப‌க்க‌ங்க‌ளிலும் ப‌க்க‌த்தொருவ‌ராக‌ ய‌ஷ‌ர் நிற்கும்,நிலையில் முனிவ‌ரைப் பார்த்துக் கொண்டிருக்கின்ற‌ன‌ர். தீர்த்த‌ங்க‌ரின் த‌லைக்கு மேலே முக்குடையும்,முக்குடைக்கு இருபுற‌த்திலும் ப‌க்க‌த்துக்கொருவ‌ராக‌ க‌ந்த‌வ‌ர்க‌ளும்,த‌லைக்குப் பின்புற‌ம் திருவாசியும் காண‌ப்ப‌டுகின்ற‌ன‌. இச்சிற்ப‌ம் ஆயிர‌த்து 200 ஆண்டிக‌ளுக்கு முற்ப‌ட்ட‌தாக‌லாம்.
வெண்மால் அக‌ர‌ம், தொழுப்பேட்டிலிருந்து 7 கி.மீ., தொலைவில் உள்ள‌ சிற்றூராகும். இவ்வூரின் மேற்குக் கோடியில் ஒரு மேட்டுப் ப‌குதியில் திருமால்,தேவி,பூதேவி ஆகியோரின் சிற்ப‌ங்க‌ள் உள்ள‌ன‌.இவை பிற்கால‌ச் சோழ‌ர் க‌லைப் பாணியில் மிக‌வும் நேர்த்தியாக‌ வ‌டிக்க‌ப்ப‌ட்டிருக்கின்ற‌ன.இச்சிற்ப‌ங்க‌ள் காண‌ப்பெறும் இட‌த்தில் முன்பு கோயில் ஒன்று அமைந்திருக்க‌ வேண்டும் போன்று தெரிகிற‌து. தொண்டை ம‌ண்ட‌ல‌ம் ப‌ழ‌மையான‌ச் சிற்ப‌ங்க‌ளின் தொட்டில் என்று கூறும‌ள‌விற்கு அடுத்த‌டுத்துப் ப‌ல‌ அரிய‌ சிற்ப‌ங்க‌ள் அண்மைக் கால‌ங்க‌ளில் இந்நிறுவ‌ன‌த்தால் க‌ண்டுபிடிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.
தின‌ம‌ல‌ர் 3.4.2000

சென்னை, மே14__ பிற்கால பல்லவர் காலத்து கல்வெட்டுகள் மூன்று மதுராந்தகம் அருகில் உள்ள களத்தூரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தொல் பொருள் துறையினர்….மேலும் மதுராந்தகம் தாலுகா களத்தூரில் ஆய்வு மேற்கொண்டனர். ஊராட்சி மன்றத்தலைவர் கங்காதரன் இவ்வூரில் கல்வெட்டுகள் உள்ளன என்று கூறியதையடுத்து இந்த ஆய்வு நடந்தது. ஆய்வு நிறுவன செயலர் தாமரைக்கண்ணன்,கடலூர் மாவட்ட பொறுப்பாளர் தமிழரசன் ஆகியோர் ஆய்வை மேற்கொண்டனர். இவ்வூரில் சிவன் கோயில் அருகில் கவனிப்பாரற்று கிடந்த தனித்தனி கற்களில் இக்கல்வெட்டுகள் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டனர். ஆய்வில் இக்கல்வெட்டுகள் பிற்கால பல்லவர் காலத்தையோ அல்லது முற்கால சோழர் காலத்தையோ சேர்ந்தவையாக இருக்கலாம் என்றும் கி.பி.9 அல்லது 10ம் நூற்றாண்டை சேர்ந்தவையாகவும் இருக்கலாம் எனவும் தெரிய வந்துள்ளது. இத்தகவலை தொல்பொருள் ஆய்வுத் துறை தலைவர் நடன.காசிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தின‌ம‌ல‌ர்

சென்னை,ஆக. 26 காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் வட்டத்தில் உள்ள பொலம்பாக்கத்தில் மூன்று கல்வெட்டுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

 தாமரைக்கண்ணன், 1976 முதல் தினமணி சுடர் கட்டுரைகள் மூலம் எனக்குஅறிமுகமானவர். அக் கட்டுரைகளில் அவர் ஆய்வுத் திறன் மட்டுமின்றி, மதுராந்தகத்தில் இருந்து சூணாம்பேடு செல்லும் சாலையில் 11 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பொலம்பாக்கம். இங்கு கல்வெட்டுகள் இருப்பதாக ஊர் பஞ்சாயத்து தலைவர் ராதாகிருஷ்ணமூர்த்தி தகவல் கொடுத்தார்.கல்வெட்டு ஆய்வாளர்கள் புலவர் தாமரைக்கண்ணன்,பண்ருட்டி கவிஞன்தமிழரசன் ஆகியோர் ஆய்வில் ஈடுபட்டனர். கிராம மக்கள் உதவியுடன் பூமியில் புதைந்திருந்த மூன்று கற்கள் வெளியில் எடுக்கப்பட்டன. 12ம் நூற்றாண்டில் (மகா) தேவர் கோயிலுக்குக்கொடை அளித்த செய்தி ஒரு கல்வெட்டு மூலம் தெரியவந்துள்ளது. நிலம் இறையிலியாகக் கொடுக்கப்பட்டதற்கு நாரண (பட்டர்) ,வெட்சியூருடையான் ஆகிய இருவர் சாட்சியாக இருந்துள்ளமையும் அறிய முடிகின்றது. சேடக்குட்டை என்ற இடத்தில் கண்டறியப்பட்ட கல்வெட்டில்,”ஸ்வஸ்திஸ்ரீ இத்தந்மம் ஒய்மாநாட்டு உலகமாபுரத்து வியாபாரி கஞ்சனுகுடையான் கடல்நக்கன் இத்தந்மம்” என்ற தொடர் காணப்படுகிறது. திண்டிவனத்தை சேர்ந்த வியாபாரி எதற்கு என்ன நன்கொடை அளித்தார் என்பதுஇக்கல்வெட்டின் மூலம் அறிய முடியவில்லை. மூன்றாவது கல்வெட்டு ஊரின் கீழ் ராஜவீதியில் கண்டுபிடிக்கப்பட்டது. அது திருமால் சக்கரம் பொறிக்கப் பெற்ற ஆழிக்கல்வெட்டு, பெருமாள் கோயிலுக்குஅளிக்கப்படும் நிலக்கொடையின் எல்லைகளில் நடப்படுகின்ற கல்லே ஆழிக்கல்லாகும்.இக்கல்வெட்டு சங்கமவமிசத்து அரசன் வீரப்பிரதாபராயர் ஆட்சியில் (கி.பி.1485)பொறிக்கப்பட்டது. அதில் ‘விண்ணகர்’ என்ற சொல் காணப்படுகின்றது. ஊ ரின் மேல தெருவில் இருந்த திருமால்கோயில், அன்னியர் படையெடுப்பால் சிதைக்கப்பட்டது.இந்தக் கோயிலுக்குத்தான் கி.பி.1485ல் நிலக்கொடை அளிக்கப்பட்டு, நான்கு எல்லைகளிலும் ஆழிக்கல் நடப்பட்டுள்ளது.கல்வெட்டெழுத்துகள் முழுமையாகப் படிக்க முடியாதபடி தெளிவில்லாமல் இருக்கின்றன.
தின‌ம‌ல‌ர் 26.8.97

சென்னை,மே .8 -திண்டிவனம் வட்டத்தில் உள்ள தாதாபுரம் என்னும் ஊரில் ,சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட “நவகண்டப்பலி வீரன்” சிலை ஒன்று கண்டறியப்பட்டது.

போரில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு “நடுகல்” எடுத்து அந்நாளில் வழிபட்டார்கள். வீரனுடைய திருவுருவம் அந்த நடுகல்லில் பொறிக்கப்பட்டிருக்கும். வீரர்களை போற்றி வழிபட்டதைப் போலவே,கொற்றவைக்காகவோ அல்லது பொது மக்களின் நன்மைகளுக்காகவோ உயிர் தியாகம் செய்த தியாகிகளையும் ,தமிழர்கள் சிலையில் வடித்துப் போற்றி வழிபட்டு வந்தார்கள்.அச்சிலைகள் சாவான் சிலைகள் என்றும் நவகண்டம் என்றும் பொதுவில் வழங்கப்படுகின்றன.தங்கள் உடம்பில் உள்ள ஒன்பது உறுப்புகளையும் தாங்களாகவே அறுத்துக் கொடுத்துக் கொற்றவையை வழிபட்டதால் “நவகண்டப்பலி” என்று அது கூறப்படுகிறது. தமிழ் நாட்டில் பல இடங்களில் சாவான் சிலைகளைக் காணலாம்.ஆனால் அச்சிலைகளில் எதன் பொருட்டு ,யார் அந்த பலியைக் கொடுத்தார் என்ற விவரம் பொறிக்கப்பட்டிருப்பது அபூர்வம். அருகே காணப்படும் நவகண்டப்பலி வீரனின் சிற்பத்தில் அவன் பெயரும் செய்தியும் பொறிக்கப்பட்டிருப்பதால், இது முக்கியமான சிலையாகக் கருதப்படுகிறது.இதில் உள்ள வீரன்,தன் இடக்கையில் தன் தலை மயிரைக் கற்றையாக இழுத்துப் பிடித்துக் கொண்டு வலக்கையில் வாள் பிடித்துக் கழுத்தின் பின் பக்கமாகத் தன் தலையை அறுத்துக் கொள்கிறான். அவன் முகத்தில் துன்பத்தின் சாயலே இல்லை.புன்சிரிப்புடன் உயிர்த் தியாகம் புரியும் அவன் முகத்தில் பூரிப்பும் பெருமிதமும் காணப்படுகின்றன.இச்சிலையில் பதினோராம் நூற்றாண்டுத் தமிழ் எழுத்துக்கள் காணப்படுகின்றன. “தைஞ்சு செய்யன் கொழகனுக்கு இராவிலே…கங்க…நம்பி செ குடுத்தார் ராஜேந்திர நாந சோழ தந்ம செட்டியார்கு எழுத்து” என்ற தொடர் காணப்படுகிறது.செய்யன் கொழகன் என்பவனுக்கு இரவிலே என்ன நடந்தது… ராஜேந்திரனான சோழ தன்ம செட்டியார் யார் என்று தெரியவில்லை. புதுவை வரலாற்றுச் சங்கத் தலைவரும் புதுவை மாவட்ட ஆட்சித் தலைவருமாகிய பி.எல்.சாமி தலைமையில் தாதாபுரம் வட்டாரத்தில் கள ஆய்வுப்பணி நடை பெற்ற போது,இந்தச் சிலை கல்லேரியம்மன் கோயில் அருகே கண்டறியப்பட்டது. அச்சிறுபாக்கம் தாமரைக்கண்ணனும் பாகூர் குப்புசாமியும் இச்சிலை பற்றிய கள ஆய்வுப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.
தின‌ம‌ல‌ர் 8.5.82

தமிழ்நாடு தொன்மை இயல் ஆய்வு நிறுவனம் ,காஞ்சிபுரம் மாவட்டம் சிறுதாமூர் கிராமத்தில் சோழர் காலத்திய அரிய கல்வெட்டுக்களையும்,சிற்பங்களையும

முதன்முதலாக கண்டுபிடித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு தொன்மை இயல் ஆய்வு நிறுவனம் வெளியட்ட செய்திக்குறிப்பு: காஞ்சிபுரம் மாவட்டம் ,மதுராந்தகம் தாலுக்காவில் ஒரத்திக்கு அருகில் உள்ளது சிறுதாமூர் கிராமம்.இங்கு சோழர் காலத்தில் கட்டப்பட்ட சிவன் கோயில்,புதர் மற்றும் மண்ணுக்குள் புதைந்துவிட்டது.அதை சீரமைக்கும் பணிகளை ஊர் நாட்டாண்மை பாலகிருஷ்ணன் தலைமையில் மேற்கொண்டனர்.அப்போது மண்ணுக்குள் பழங்கால சிற்பங்களும், கல்வெட்டுக்களும் புதைந்துக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இத்தகவல் அச்சிறுபாக்கம் கல்வெட்டு ஆய்வாளர். தாமரைக்கண்ணன் அவர்கள் தமிழ்நாடு தொன்மை இயல் ஆய்வு நிறுவனத் தலைவர் நடன.காசிதநானுக்கு தெரிவித்தார். தொன்மை இயல் துறையினர் சிறுதாமூர் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.அங்குள்ள கல்வெட்டுகளின் மூலம் இக்கோயில் கி.பி.1118_1136ம் நூற்றாண்டில் வாழ்ந்த விக்கிரமசோழன் காலத்தைச் சேர்ந்தது என்பது தெரிய வந்தது.கோயில் சுவர்களில் கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.இங்குள்ள கல்வெட்டுக்களில் விக்கிரமசோழ மன்னன் காலத்திய கல்வெட்டுக்கள் தான் பழமையானதாகத் தெரிகிறது. இங்குள்ள கல்வெட்டுக்கள் இந்த சிவன் கோயிலை அகத்தீவரமுடைய மகாதேவர் கோயில் என்று குறிப்பிடுகின்றன.சிறுதாமூர் என்னும் இவ்வூர் ஜெயங்கொண்ட சோழ மண்டலத்தில் ஒய்மா நாடாக திருநல்லூர் நாட்டில் அடங்கி இருந்தது.இங்கு காணப்பெறும் ஒரு விஷ்ணு சிற்பம் பிற்கால பல்லவர் காலத்தை சேர்ந்தது.இக்கோயிலை புதுப்பித்து வழிபாடு நடத்த ஏற்பாடுகள் நடக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தின‌ம‌ல‌ர் 12.8.2001

காஞ்சிபுரம் அருகே சோழர் காலப் புதிய‌ கல்வெட்டுகள் கண்பிடிக்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரத்தில் இருந்து வந்த‌வாசி செல்லும் சாலையில்,18 கி.மீ., தொலைவில் உள்ளது கூழம்பந்தல். இந்த ஊரின் கிழக்கே, முதலாம் ராசேந்திரன்(கி.பி.10.12.1044) கால‌த்தில் க‌ட்ட‌ப்ப‌ட்ட‌ ‘க‌ங்கை கொண்ட‌ சோழீச்சுர‌ம்’ என்ற கோயில் உள்ளது.ஊரின் மேற்கே த‌ற்போது வ‌ர‌த‌ராஜ‌ப் பெருமாள் கோயில் என வ‌ழ‌ங்கும் கோயில் ஒன்று இருந்து சித‌ல‌மாகி விட்ட‌து. இக்கோயில் ப‌ற்றி அர‌ங்காவ‌ல‌ர் புல‌வ‌ர் ப‌க்த‌வ‌ச்ச‌ல‌ம்,ஆசிரிய‌ர் தாமோத‌ர‌ன் ஆகியோர் தெரிவித்த‌த‌ற்கு இண‌ங்க,கல்வெட்டு ஆய்வாள‌ர் புல‌வ‌ர். தாம‌ரைக்க‌ண்ண‌ண், புல‌வ‌ர். திருவேங்க‌ட‌ம் ஆகியோர்க‌ள் ஆய்வு மேற்கொண்ட‌ன‌ர்.கூழம்பந்தலுக்குத் தெற்கே வெள்ளாம‌லை என்னுமிட‌த்தில் ப‌ழங்கால முதும‌க்க‌ள் தாழியும் மந்‌தை வெளியில் இருக்கும் ம‌ண்ட‌ப‌த்தில் சுமார் இருநூறு ஆண்டுக‌ட்கு முற்ப‌ட்ட‌ கல்வெட்டு ஒன்றும் கண்ட‌றிய‌ப்ப‌ட்ட‌ன. பெருமாள் கோயில் க‌ட்டுமான‌ப் ப‌ணியின்போது, பூமிக்க‌டியில் இர‌ண்டு மீட்ட‌ர் ஆழ‌த்தில் ப‌ல துண்டுக் க‌ற்க‌ளில் க‌ல்லெழுத்துக‌ள் இருந்த‌தை அறிய முடிந்த‌து. அந்த‌ எழுத்துக்க‌ள் இர‌ண்டாம் ராசேந்திரனின் மெய்கீர்த்தியைக் குறிப்பிடுகின்றன‌. இவ்வூர் ஒன்ப‌து நூற்றாண்டுக‌ளுக்கு முன் ஜெய‌ங்கொண்ட‌ சோழ ம‌ண்ட‌ல‌த்து காலியூர்க் கோட்ட‌த்து பாகூர் நாட்டில் இருந்துள்ளது. வாயில் தூண்களில் இரண்டு பக்கமும் , தெலுங்குச் சோழனான விஜயகண்ட கோபாலனின் (கி.பி.1270) முழுமையான கல்வெட்டு ஒன்று கிடைத்தது. விக்கிரம சோழபுரம் பெயர் பெற்ற இவ்வூர் முதன்முதலாக ‘கூழவன் பந்தல்’ என்று அழைக்கப்பட்டதை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.இறைவனுக்குப் ‘பேசும் பெருமாள்’ என்னும் பெயர் வழங்கி இருந்தமையும் அறிய முடிகின்றது.இக்கோயிலில் விளக்கெரிக்கப் பத்துப் பணமும்,பதின் கல நெல்லும் கொடையாக அளிக்கப்பட்டதையும் இக்கல்வெட்டு உணர்த்துகிறது. கள ஆய்வில் 12 அடி உயரமுள்ள விஷ்ணு சிலையும் கண்டுபிடிக்கப்பட்டது. தின‌ம‌ல‌ர் சென்னை 22.4.98.

மதுராந்தகம்.ஜன.24- காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் வட்டத்தில் சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் 101 வது கி.மீ. தூரத்தில் உள்ளது தொழுப்பேடு கிராமம்.
இவ்வூர் ஏரியில் ஒரு சிறுகுளத்தில் நீருக்கடியில் இருந்த கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டது. “வீரபத்திர நாயனாற்கு கிடங்கில் புதுவமுடை ஆடவல்லான்… வயான் பழஅருவ(யி)ட்ட பேராடு தொண்ணூறு அல்லவும் கைக்கொண்டு கெங் (கைக்)கரையிலே காராம் பசுவை கொன்ற பாவத்திலே போவார்” என்பது கல்வெட்டு வாசகம். ஏரிக்கரையின் கீழ்க் கோடியில் உள்ளதே இந்த வீரபத்திரர் கோயில் என்பது தெரிந்தது. உள்ளே அழகிய வீரபத்திரரின் கற்சிலை.இக்கோயில் பெரும்பேறு மலை மீதுள்ள முருகர் கோயிலுக்கு சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.வீரபத்திரர் சிவனின் அம்சம் என்பர். இக்கல்வெட்டு முந்நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட எழுத்துக்களைக் கொண்டுள்ளதால் கோயில் அதனினும் பழமையானது என்று கருதலாம். புத்தமங்கலம்: இன்னொரு கல்வெட்டு,தொழுப்பேட்டிற்குக் கிழக்கே சுமார் 5 கி. மீட்டர் தொலைவில் உள்ள புத்த மங்கலத்தில் கிடைத்தது. ஊரின் தெற்கில் முட்புதர்களிடையே இடிந்த நிலையில் இருக்கும் ‘கந்தப்பர்’ கோயிலின் நுழைவாயில் மேற்கூரைப் பலகையில் உள்ளது. கலியாண்டு 4830 சகம் 1650, பிரபவ வருடம் ஆனி மாதம் 23ம் தேதி (கி.பி.1728-29) பொறிக்கப்பட்டது. ‘(கந்தப்ப) சுவாமியோர் (ஆலயப்) பிரவேசம் செய்ததனால் ஆயிரவர்கள் (வணிகர்கள்)’கொடை கொடுத்துள்ளனர். நல்லதம்பி செட்டியார், வழுத செட்டியார்,தாண்டவராயசெட்டியார்,சீலநா செட்டியார், குமாரன் ஆகியோர் பெயர்கள் காணப்படுகின்றன. இவ்விரு கல்வெட்டுகளையும் பற்றி தொழுப்பேடு அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் மு.காளிதாஸ் தகவல் கூற,கல்வெட்டு ஆய்வாளர் அச்சிறுபாக்கம் புலவர்.தாமரைக்கண்ணன் மைப் படியெடுத்துப் படித்தார். தினமலர் சென்னை 24-1-2001.

மதுராந்தகம்,டிச.29_செய்யூர் தாலுக்காவிலுள்ள அகதீசுவரர் கோயிலில் 13வது நூற்றாண்டை சேர்ந்த தமிழ் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. செங்கை மாவட்டம் செய்யூர் தாலுக்காவிலுள்ள புத்திரன் கோட்டையில் அகதீசுவரர் கோயில் உள்ளது.இந்த கோயிலில் 28 தமிழ் கல்வெட்டுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இந்த கல்வெட்டுகள் ஜடாவர்ம சுந்தரபாண்டியன்,மாறவர்மன் சுந்தரபாண்டியன்(13ம் நூற்றாண்டு)காலத்தை சேர்ந்தவை என்று ஆய்வு மூலம் தெரிகிறது.புத்திரன் கோட்டை என்ற இந்த கிராமத்தின் பெயர் புத்தனார் கோட்டை என்றும்,கோயில் மண்டபத்தை கட்டியவர்கள் பெய ர்களும் இந்த கல்வெட்டுகள் மூலம் தெரிய வருகிறது.கல்வெட்டுகளை டாக்டர்.தாமரைக்கண்ணன் கண்டுபிடித்துள்ளார். தினமலர் 29.12.1987

சென்னை,ஏப்,3 _ செய்யூர் தாலுக்கா ஈசூரில் ஆயிர‌த்து 300 ஆண்டுக‌ளுக்கு முந்தைய‌ விஷ்ணு சிற்ப‌ம் க‌ண்டுபிடிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.
பெரண மல்லூரில் உள்ள எட்டியம்மன் கோயிலில் பழமையான சிற்பங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூரில் எட்டியம்மன் கோயில் உள்ளது.
இக்கோயிலில் ஆயிரத்து 100 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிற்பங்கள் இருப்பது
கண்டுபிடிக்கப்பட்டது.இச்சிற்பம் அய்யனார் ஆகும்.
இக்கோயிலில் மற்றொரு பெண் அணங்கின் சிற்பமும் காணப்படுகிறது.இச்சிற்பம்
கவுமாரியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.இச்சிற்பங்கள் கி.பி.ஒன்பதாம்
நூற்றாண்டை சேர்ந்தது என்று தொன்மையியல் ஆய்வு நிறுவனச்
செயலாளர் தாமரைக்கண்ணன் கண்டறிந்துள்ளார்.
இத்தகவலை தொன்மையியல் ஆய்வு நிறுவனத் தலைவர் நடன.காசிநாதன் தெரிவித்துள்ளார்.
தினமலர் 31.3.99

இந்தியா முழுவ‌தும் ஜேஷ்டா தேவியின் வ‌ழிபாடு ஒரு கால‌த்தில் மிக‌ச் சிற‌ப்பாக‌ இருந்த‌து.விஷ்ணு த‌ர்மோத்திர‌ம், லிங்க‌ புராண‌ம், சைவ‌ ஆக‌ம‌ங்க‌ள்,த‌மிழ் நிக‌ண்டுக‌ள் முத‌லிய‌ன ,
ஜேஷ்டாதேவியின் தோற்ற‌த்தையும் உருவ‌ அமைப்பையும் வ‌ழிபாட்டு முறைக‌ளையும் விள‌க்க‌மாக‌ உரைக்கின்ற‌ன‌.ம‌துரை திருப்ப‌ர‌ங்குன்ற‌ம் கோயிலில் உள்ள‌ சுப்பிர‌ம‌ணிய‌ர்,ஜேஷ்டா தேவியின் திரிவுருவே என்று ப‌ல‌ அறிஞ‌ர்க‌ளும் ஆய்ந்துள்ள‌ன‌ர்.
த‌மிழ்நாட்டிலும்,ஆந்திராவிலும் கிடைத்துள்ள ப‌ல‌ நூற்றுக்க‌ண‌க்கான‌ ஜேஷ்டாதேவிக‌ளிலிருந்து த‌னித்துவ‌ம் பெற்ற ப‌ழ‌மையான‌ ஜேஷ்டாதேவியின் சிலை ஒன்று வ‌டார்க்காடு மாவ‌ட்ட‌ம், வ‌ந்த‌வாசி வ‌ட்ட‌ம், தெள்ளாறு கிராம‌த்தில் வ‌ழிபாட்டில் இருந்த‌து அண்மையில் க‌ண்டுபிடிக்க‌ப்ப‌ட்ட‌து.பிற்கால‌ப் ப‌ல்ல‌வ‌ர்க‌ள் அல்ல‌து சோழ‌ர்க‌ள் கால‌த்திய‌ பாணியில் உள்ள இத்திருவுருவில் காக்கைக் கொடியும் துடைப்ப‌ ஆயுத‌மும் ,க‌ழுதை வாக‌ன‌மும் ,கையில் கொம்புட‌ன் ந‌ந்திமுக‌ம் கொண்ட‌ அழ‌க‌ற்ற வாலிப‌னும்; அழ‌கே ஓர் உருவான‌ பெண்ணும், அக்னிக் க‌ல‌ச‌மேந்திய‌ சேடியும் இருப்ப‌து, ச‌ம‌கிருத‌த்தில் வ‌ருணிக்க‌ப்ப‌ட்ட‌ ஜேஷ்டாதேவியை அப்ப‌டியே நினைவூட்டுகிற‌து. புதுவையில் உள்ள‌ பிரெஞ்ச் இன்டிடியூட் ஆப் இந்தோல‌ஜி என்னும் ஆய்வ‌க‌த்தில் உள்ள‌ ப‌ல‌ நூறு ஜேஷ்டாதேவிச் சிற்ப‌ங்க‌ளுட‌ன் ஒப்பிட்டுப் பார்த்த‌போது இத‌ன் த‌னித்த‌ன்மையும் சிற‌ப்பும் தெரிந்த‌து. அச்சிறுபாக்க‌ம் புல‌வ‌ர் தாம‌ரைக்க‌ண்ணனும் ,பாகூர் புல‌வ‌ர் சு.குப்புசாமியும் வ‌ழிபாட்டில் இருந்த‌ இத‌ன் சிற‌ப்பைக் க‌ண்ட‌றிந்த‌ன‌ர். தினமணி 3.1.82

செங்க‌ற்ப‌ட்டு மாவ‌ட்ட‌ம், ம‌துராந்த‌க‌ம் வ‌ட்ட‌த்தின் தென் ப‌குதியில் ,சூண‌ம்பேடு வ‌ட்டார‌த்தைச் சேர்ந்த ஈசூர் என்னும் கிராம‌த்தில் ஒரு சிறு குள‌த்தில் ம‌ண் வாரிய‌ போது ,சோழ‌ர் கால‌த்திய அரிய‌ ப‌ஞ்ச ‌லோக விக்கிர‌க‌ங்க‌ள் கிடைத்த‌ன.
சிவ‌பெருமான்_சிவ‌காமி அம்மன் திருமேனிக‌ள் எம்பெருமான் மான் ம‌ழுவுட‌ன் காட்சி அளிக்கிறார்.கால்க‌ளில் வீர‌க்க‌ழ‌ல்க‌ள் பாத‌ச் ச‌ங்கிலிக‌ள் காதுக‌ளில் ப‌த்திர குண்ட‌ல‌ம், வ‌டிந்த காதுக‌ள் கைக‌ளிலும் மார்பிலும் க‌ழுத்திலும் த‌லையிலும் இடையிலும் அற்புத‌மான
அணிம‌ணிக‌ள்.அம்ம‌ன் க‌டிஹ‌த‌த்துட‌ன் காட்சிய‌ளிக்கிறாள்.அவ‌ள் உட‌லில் உள்ள ஆடைக‌ளும் அணிம‌ணி வ‌கைக‌ளும் க‌ண்க‌ளை ப‌றிக்கின்ற‌ன‌.இருவ‌ரும் நிற்கும் அழ‌கே அழ‌கு.
பீட‌த்துட‌னும் உடைந்த‌ பிர‌பையுட‌னும் இந்த திருமேனிக‌ள் பூமிக்க‌டியில் பாதுகாப்பாக‌ புதைத்து வைக்க‌ப்ப‌ட்டிருந்த‌ன‌. முக‌லாய‌ர் ப‌டையெடுப்பால் இவ்வாறு பாதுகாக்க‌ப்ப‌ட்டிருக்க‌லாம்.
திருமேனிக‌ள் கிடைத்த‌ உட‌ன்,த‌மிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத் துறை இய‌க்குந‌ர்
டாக்டர் இரா.நாக‌சாமி அவ‌ர்க‌ளிட‌ம், புல‌வ‌ர் தாம‌ரைக்க‌ண்ண‌ன் முத‌ன் முத‌லாக‌ அறிவித்தார்.
த‌ற்போது அவை மாவ‌ட்ட ஆட்சியாள‌ர் பாதுகாப்பில் இருக்கின்ற‌ன.
தின‌ம‌ணி 3.9.78

சென்னை,மே 7-வ‌ட‌ ஆர்க்காடு மாவ‌ட்ட‌த்தில் திருப்ப‌த்தூரிலிருந்து சுமார் 12 கிலோ மீட்ட‌ர் தூர‌த்தில் ச‌ந்திர‌புர‌ம் என்னும் ஊரில் அடிவார‌த்தில் பெரிய குகைக‌ள் உள்ள‌ன‌.
அவ‌ற்றுள் ஒன்று க‌லியாண‌க் குகை என்ப‌து. இந்த‌க் குகையில் சுமார் 5000 ஆண்டுக‌ளுக்கு முன்பே ம‌னித‌ர்க‌ள் வாழ்ந்துள்ள‌ன‌ர். ம‌லை அடிவார‌த்திலும், குகைக‌ளிலும் அவ‌ர்க‌ள் கையாண்ட‌ புதிய க‌ற்கால ஆயுத‌ங்க‌ள் காண‌ப்ப‌டுகின்ற‌ன.க‌லியாண‌க் குகையில், வெள்ளை நிற‌த்தில் இர‌ண்டு ஓவிய‌ங்க‌ளும் ,செம்மை நிற‌த்தில் சில‌ ஓவிய‌ங்க‌ளும் காண‌ப்ப‌டுகின்ற‌ன.
ம‌னித உருவ‌ங்க‌ள் செம்மை நிற‌ வ‌ரைகோட்டில் வ‌ரைய‌ப்ப‌ட்டுள்ள‌ன‌. மேலும் குதிரைக‌ள், குதிரை வீர‌ன், ப‌ல‌வித அடையாள‌ங்க‌ள் முத‌லிய‌வை இந்த‌ ஓவிய‌ங்க‌ளில் காண‌ப்ப‌டுகின்ற‌ன(ப‌ட‌ங்க‌ளை பார்க்க‌வும்).
இந்த‌க் க‌லியாண‌க் குகையின் மேற்புற‌த்தில் இருப‌துக்கு மேற்ப‌ட்ட கைச் சின்ன‌ங்க‌ளும், இர‌ண்டு ம‌னித பாத‌ங்க‌ளும் காண‌ப்ப‌டுகின்ற‌ன. குதிரை ஓவிய‌ங்க‌ள் இருப்ப‌தாலும் ஓவிய‌ங்க‌ளின் அமைப்பு க‌ருதியும் இவ‌ற்றின் கால‌ம் சுமார் 2500 ஆண்டுக‌ளுக்கு முந்தைய பெருங் க‌ற்கால‌ம் என்று வ‌ர‌லா‌ற்றாசிரிய‌ர்க‌ள் க‌ருதுகின்ற‌ன‌ர்.இந்த‌ அரிய ‌ குகை ஓவிய‌ங்க‌ளைக் க‌ல்வெட்டு ஆராய்ச்சியாள‌ர் அச்சிறுபாக்க‌ம் தாம‌ரைக்க‌ண்ண‌ன் க‌ண்டுபிடித்துள்ளார். அவ‌ருக்கு உட‌ன் இருந்து உத‌வி செய்த‌வ‌ர் ஆசிரிய‌ர் சுந்த‌ர‌ம் என்ப‌வ‌ர். மேலும் இங்கு ஆய்வு ந‌ட‌த்தினால் நிறைய‌ பாறை ஓவிய‌ங்க‌ள் கிடைக்க‌லாம் என்று தாம‌ரைக்க‌ண்ண‌ன் கூறினார்.
தினமலர் சென்னை 8.5.89 .

த‌மிழ‌க‌த்தில் தொன்மை இய‌ல் ஆய்வு நிறுவ‌ன‌ம்,சுமார் 1500 ஆண்டுக‌ளுக்கு முற்ப‌ட்ட‌ அரிய இய‌க்கிச் சிற்ப‌த்தைச் செங்க‌ற்ப‌ட்டு மாவ‌ட்ட‌ம் ம‌துராந்த‌க‌ம் வ‌ட்ட‌ம் தொழுப்பேட்டுக்கு
அருகில் உள்ள‌ கடைம‌லைப்ப‌ற்று ஊரில் க‌ண்டுபிடித்துள்ள‌து.
இதுவ‌ரை,இத்த‌கைய‌ ப‌ழ‌மையான இய‌க்கிச் சிற்ப‌ம் த‌மிழ‌க‌த்தில் க‌ண்டுப்பிடிக்க‌ப்ப‌ட‌வில்லை.
இச் சிற்ப‌ம் 150 செ.மீ. உய‌ர‌ம்,44.5 செ.மீ. அக‌ல‌ம் உடைய‌து.இய‌க்கியின் வ‌ல‌ப்ப‌க்க‌த்தில் ப‌ணிப் பெண் ஒருத்தி ஆப‌ர‌ண‌ப் பேழையைச் சும‌ந்திருக்கும் நிலையிலும், இட‌ப்பாக‌த்தில் ம‌ற்றொரு ப‌ணிப் பெண் குட‌த்தை த‌லையில் சும‌ந்த நிலையிலும் நிற்கின்ற‌ன‌ர்.இருவ‌ர‌து த‌லையிலும் சிம்மாடு போன்ற
த‌லைய‌ணிய‌ன் மீதே மேற்காணும் பேழையும் குட‌மும் காண‌ப்பெறுகின்ற‌ன.ப‌ணிப்பெண்க‌ளும்
இருக‌ர‌ங்க‌ளையே கொண்டுள்ள‌ன‌ர்.இவ்விரு ப‌ணிப்பெண்களோடும் இய‌க்கி உருவ‌த்தைப்
பார்க்கையில் த‌ம்மை வ‌ழிப‌டும் ம‌க்க‌ளுக்கு வ‌ள‌ம் சேர்க்கும் வ‌ள‌மைத் தெய்வ‌மாக‌ இது
வ‌ழிப‌ட‌ப்ப‌ட்டிருக்குமோ என்னும் ஐய‌த்தை ஏற்ப‌டுத்துகிற‌து.த‌மிழ‌க‌த்தில் இய‌க்கி உருவ‌ம்
ச‌ம‌ண‌ச‌ம‌ய‌‌த்தைச் சார்ந்த‌தாக‌வே க‌ருத‌ப்ப‌டுகிற‌து.
த‌மிழ் இல‌க்கிய‌ங்க‌ளில் சில‌ப்ப‌திகார‌த்தில்தான் முத‌ன்முத‌ல் இய‌க்கியைப் ப‌ற்றிய‌ தெளிவான‌ குறிப்பு காண‌ப்ப‌டுகிற‌து.இதில் “பூங்க‌ணி இய‌க்கி” என்று பேச‌ப்ப‌டுகிற‌து.ம‌துரையின் கீழ்திசையில் “புற‌ஞ்சிறை மூதூரி” பகுதியில் பூங்க‌ணி இய‌க்கிக் கோயில் இருந்த‌தாக‌வும் ஆய‌ர்பாடியைச் சேர்ந்த மாத‌ரி என்ற ஆய‌ர் முதும‌க‌ள் இத் தெய்வ‌த்தை வ‌ழிப‌ட்டாள் என்றும் சில‌ம்பில் அடைக்கலக் காதை வரிகள் உணர்த்துகின்றன.
ஆத‌லால்,கி.பி.5_6_ம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே இய‌க்கி வ‌ழிபாடு த‌மிழ‌க‌த்திலிருந்து வ‌ந்திருப்ப‌தை உண‌ர‌லாம்,இத‌ன் அடிப்ப‌டையிலும் ம‌ற்றும் கி.மு.2_ம் நூற்றாண்டைச் சேர்ந்த அம‌ராவ‌தி இய‌க்கி
சிற்ப‌த்தின்,உருவ‌ அமைதி கொண்டும் காண்கையில் ம‌லைப்ப‌ற்று இய‌க்கி நிச்ச‌ய‌மாக‌ கி.பி.5_6_ம் நூற்றாண்டையோ அல்ல‌து அத‌ற்குச் ச‌ற்று முந்தைய‌ கால‌த்தையோ சார்ந்ததாகலாம்.
இவ்வியக்கி சிற்பத்துக்கு வடக்கிலும் தெற்கிலும் ஒவ்வொறு ஐயனார் சிற்பம் காணப்படுகிறது.வடப்பாகத்திலிருப்பது கி.பி.6_7_ம் நூற்றாண்டையும் இடப்பக்கத்திலிருப்பது கி.பி.7_8_ம் நூற்றாண்டையும் சேர்ந்ததாக இருக்கலாம்.இவை தமிழ் நாட்டில் கிடைத்துள்ள பிற ஐயனார் சிற்பங்களிலிருந்து மாறுபட்ட கூறுகளைக் கொண்டு தோற்றமளிக்கின்றன.
வடபால் உள்ள ஐயனார் சர்வாங்காசனத்தில் இருகால்களையும் மடக்கி ஒன்றோடு ஒன்றைக் குறுக்காக‌ வைத்து அமர்ந்த நிலையில் காணப்பெறுகிறது.வ‌ழ‌க்க‌த்துக்கு மாறாக‌ வ‌ல‌க்கையில் குறுவாள் ஏந்தி ,கையை ம‌ட‌க்கி மார்போடு அணைத்த‌ நிலையிலும் இட‌க்கையும் ம‌ட‌க்கி மார்போடு சேர்த்து குறுவாளைத் தொடும் நிலையில் விர‌ல்க‌ளை விரித்தும் உள்ள‌ன.இடையில் பிடியுட‌ன் கூடிய‌ குறுவாள் இடையாடைக் க‌ட்டில் செருகி வைக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து. இடைக்க‌ட்டு ஆடையின் இரு நுனிக‌ள் இருப‌க்க‌ங்க‌ளிலும் தொங்குகின்ற‌ன.இத் தோற்ற‌ம் ஐயனார் உருவ‌த்தில் இதுவ‌ரை பார்க்காத‌து.
இய‌க்கி சிற்ப‌த்தின் தென்பால் உள்ள ம‌ற்றொரு ஐயனார் சிற்ப‌மும் அம‌ர்ந்த நிலையிலேயே உள்ள‌து.ஆனால் வ‌ல‌க்கால் குத்திட்டு வைத்து இட‌க்கால் ம‌டித்து ஆச‌ன‌த்தில் ப‌டுக்கையாக வைத்த‌வாறு ம‌ற்ற ஐய‌னார் உருவ‌ங்க‌ளில் உள்ள‌வாறு காண‌ப்ப‌டுகின்ற‌ன‌.வ‌ல‌க் கையை ம‌டித்து ம‌ல‌ர் ஒன்றை ஏந்தி மார்போடு சேர்த்துள்ள‌வாறும் இட‌க்கை தொங்கும் க‌ர‌மாகத் தொடைக்கருகில் வைத்துள்ளவாறும் காட்சியளிக்கின்றன.ஒரு காதில் மகர குண்டலமும்,மற்றொரு காதில் மலர் செருகியிருப்பது போன்றும் தெரிகின்றன.இவ்வுருவத்தில் வலக்கரம் அமைந்திருக்கும் முறை புதுமையாக உள்ளது.ஐய‌னாரின் இடையில் குருவாள் செருக‌ப்ப‌ட்டுள்ள‌து.இந்த‌ ஐய‌னாருக்கு வ‌ல‌ப்ப‌க்க‌த்தில் வாலை உய‌ர்த்திச் சுருட்டிக் கொண்டு நிற்கும் நிலையில் உள்ள‌ நாய் உருவ‌ம் காண‌ப்படுகிற‌து.ஐய‌னாருக்குப் ப‌க்க‌த்தில் நாய் உருவ‌ம் காண‌ப்பெறுவ‌து தொன்று தொட்டு வ‌ரும் ம‌ர‌பாகும். தொட‌க்க‌த்தில்
ஐய‌னாருக்கு உற்ற தோழ‌னாக‌ நாய் இருந்த‌து என்றும் பிற்கால‌த்தில் வாக‌ன‌மாக‌ குதிரை,யானை
சேர்க்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து என்றும் அறிய‌ முடிகிற‌து.
ச‌ம‌ண‌ ம‌த‌த்தின‌ருக்கு ம‌ட்டும் உரிய தெய்வ‌மாக‌ விளங்கிய‌போது ஐய‌னாருக்கு அருகில் நாய் ம‌ட்டுமே இருந்த‌து.அனைத்துத் த‌ர‌ப்பு வ‌ணிக‌ர்க‌ளின் தெய்வ‌மாக‌ ஐய‌னாரை வ‌ழிப‌ட‌த் தொட‌ங்கிய‌போது குதிரையும், அத்திகோச‌த்தார் என்ற சிறப்பு வ‌ணிக‌ப்ப‌டையின‌ர் வ‌ண‌ங்க முற்ப‌ட்ட நாளிலிருந்து யானையும் ஐய‌னாரின் வாக‌ன‌மாக‌ச் சேர்க்க‌ப்ப‌ட்டிருக்க‌லாம் என்றும் க‌ருத இட‌மேற்ப‌டுகிற‌து.

அச்சிறுபாக்க‌ம் பல்க‌லை வித்த‌க‌ர் கல்வெட்டு ஆய்வாளர். தாம‌ரைக்க‌ண்ண‌ன் அவர்களுடன்
ந‌ட‌ன.காசினாத‌னும் தொல்பொருள் ஆய்வுத் துறை ப‌திவு அலுவ‌ல‌ர் மா.ச‌ந்திர‌மூர்த்தியும் சிற்ப‌ங்க‌ளை நேரில் பார்த்து சிற்ப‌த்தின் பெய‌ர்,கால‌ம் ஆகிய‌வ‌ற்றை முடிவு செய்த‌ன‌ர். தின‌ம‌ணி 19.1.1999‌

மதுராந்தகம் அருகே கண்டுபிடிப்பு பல்லவர் காலத்து கல்தூண் ஒன்று மதுராந்தகம் தாலுகாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
செங்க‌ற்ப‌ட்டு மாவ‌ட்ட‌ம் ,மதுராந்தகம் தாலுகாவில் ஒரத்தி என்னும் ஊர் உள்ளது.இங்கு
இந்த கல்தூண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த கல்தூணை “கம்மாய்” என்று அழைக்கிறார்கள்.
இந்த கல்தூண் கி.பி.9ம் நூற்றாண்டைச் சேர்ந்த‌து என்று தெரிய வ‌ந்துள்ள‌து. அதாவ‌து
சுமார் 1200 ஆண்டுக‌ளுக்கு முற்ப‌ட்ட‌தாகும்.
இந்த தூண் ப‌ல்ல‌வ ம‌ன்ன‌ன் நந்திவ‌ர்ம‌ன் கால‌த்தில் ந‌க்க‌ன் என்ப‌வ‌னால் செய்ய‌ப்ப‌ட்ட‌து.
இவ‌ன் “ஈசுவ‌ர‌ கோட்ட‌த்து,நெடுங்க‌ல் நாட்டு,ஆற்றூரைச்” சார்ந்த‌வ‌ன்.
இந்த கல்தூணைக் க‌ட்டிய‌ க‌ல்த ச்ச‌னின் பெய‌ர் “குவ‌ண‌ன்” என்று க‌ல்லில் எழுத‌ப்ப‌ட்டுள்ள‌து.

ராஷ்டிர‌ கூட‌ர் ந‌டு க‌ற்க‌ள் இதே ஊரில் ,நெல்வாய் ஏரியின் வ‌ட‌க்குப் ப‌க்க‌த்தில் இர‌ண்டு “ந‌டு க‌ற்க‌ள்” கண்டுபிடிக்கப்பட்டுள்ளன‌.(வீர ம‌ர‌ண‌ம் அடையும் வீர‌ர்க‌ளின் நினைவாக‌
ந‌ட‌ப்ப‌டும் க‌ற்க‌ளே ந‌டுக‌ற்க‌ள் ஆகும்).
இவ‌ற்றில் ஒரு ந‌டுக‌ல்லில்,ஒரு வீர‌ன் த‌ன்னுடைய க‌ழுத்தை அறுத்துப் ப‌லியாக‌க்
கொடுப்ப‌து போல சிற்ப‌ம் செதுக்க‌ப்ப‌ட்டுள்ள‌து;அதில் க‌ன்ன‌ட‌ மொழியிலும் ,த‌மிழ் மொழியிலும் கல்வெட்டுக்கள் காணப்ப‌டுகின்ற‌ன.
ராஷ்டிர‌கூட ம‌ன்ன‌ர் க‌ன்ன‌ர‌தேவ‌னின் 21வ‌து ஆட்சியாண்டில்,க‌ங்கைய‌ன்
என்ப‌வ‌ன் க‌ல் ஏரிக்குக் கீழ் கால் செய்த‌போது இந்த‌ப் ப‌லி கொடுக்க‌ப்ப‌ட்ட‌தாக‌த்
தெரிய வந்துள்ள‌து. ம‌ற்றோர் ந‌டுக‌ல்லில் உள்ள‌ எழுத்து பொறிந்து போய்விட்ட‌து.

ச‌ம‌ண‌ர் ப‌ள்ளி:
இந்த‌ ஊருக்கு அருகில் உள்ள‌ அன‌ந்த‌ம‌ங்க‌ல‌த்தில்,ஒரு குன்றில் ச‌ம‌ண‌ர்களின் ப‌ள்ளி
ஒன்று இருக்கிற‌து. (ச‌ம‌ண‌ முனிவ‌ர்க‌ள் வ‌சித்து வ‌ன்த‌ ம‌ட‌ங்க‌ளே,ச‌ம‌ண‌ ப‌ள்ளிக‌ள்
என்று அழைக்க‌ப்ப‌ட்ட‌ன‌.இந்த‌ ச‌மண‌ ப‌ள்ளி ,ப‌ராந்த‌க‌ சோழ‌ன் கால‌த்தில் ஜீன‌கிரிப்பள்ளி என்று அழைக்க‌ப்ப‌ட்ட‌து என அறிகிறோம்).இந்தச் ச‌மண‌ ப‌ள்ளி உள்ள‌ குன்றின் பாறையில்,
ச‌ம‌ண‌ தீர்த்தங்கார‌ர்க‌ள் உருவமும்,ய‌ஷி உருவ‌மும் பொறிக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌.இப்போது அந்த‌ச் சிற்ப‌ங்களின் கீழ் ஒரு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அவ‌ற்றைக் கொடுத்த‌வரின் பெய‌ர் “அர‌ட்டநேமி அடிக‌ள்” என்று அந்த‌ க‌ல்வெட்டு குறிக்கிற‌து.இவை ச‌ற்றேற‌க்குறைய
9 ம நூற்ற‌ண்டைச் சார்ந்த‌வை.

த‌மிழ்நாடு அர‌சு தொல்பொருள் ஆய்வுத் துறையில் ப‌யிற்சி பெற்ற த‌மிழாசிரிய‌ர் தாம‌ரைக்கண்ண‌ன் என்ப‌வ‌ர் இந்த‌ க‌ல்வெட்டுக்க‌ளைக் க‌ண்டறிந்து,இது ப‌ற்றி தொல்பொருள் துறைக்குத் த‌க‌வ‌ல் கொடுத்தார்.தொல்பொருள் இலாகா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு இதைத் தெரிவிக்கிற‌து.
தின‌ம‌ணி 30.7.76

தொல்பொருள் ஆய்வு

30/07/1976 – ஒரத்தியில் நந்திவர்மன், கன்னரதேவன் (கன்னட) கல்வெட்டுகள்…. அனந்தமங்கலம் சமணர் கல்வெட்டு. ‘தினமணி’

05/12/1976 – அச்சிறுபாக்கம்… பார்வதிசிலை.

-/-/1977 – விஜயநகரகாலச்செப்பேடு…

13/11/1977 – நடுகல் கண்ட கீழ்ச்சேரிக் கோழி. ‘தினமணி சுடர்’

03/09/1978 – மதுராந்தகம் வட்டம் ஈசூரில் சோழர்காலப் பஞ்சலோகப்படிமங்கள் (வீணாதர்… பார்வதி) கண்டறிந்து தொல்பொருள்துறைக்குச் செய்தி தந்தது. ‘தினமணி சுடர்’

-/-/1978 – மதுராந்தகம் வட்டம், இடைகழிநாடு, கருவம்பாக்கத்தில் வீரகேரளன் காசுகண்டு தொல்பொருள்துறைக்கு அளித்தது.

02/03/1979 – வள்ளுவர் காலத்தில் எழுதிய தமிழ் மற்றும் திருக்குறள். ‘தினமணி கதிர்’

24/05/1981 – தெள்ளாற்றில் 27 புதியகல்வெட்டுகள் படியெடுப்பு.

03/01/1982 – தெள்ளாறு… ஜேக்ஷ்டாதேவி அரியசிலை கண்டுபிடிப்பு. ‘தினமணி சுடர்’

27/03/1982 – திண்டிவனம் அருகே 1000 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு. ‘தினமணி’

08/05/1982 – 1000 வயதான அபூர்வ நடுகல். ‘தினமலர்’

05/05/1983 – திண்டிவனம் வட்டம், கீழ்ச்சேவூர் 20 புதிய கல்வெட்டுகள் படியெடுப்பு.

06/05/1983 – இரண்டு தெலுங்கு கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு.

05/10/1984 – தெள்ளாறு… கன்னரதேவன் கல்வெட்டு.

10/12/1984 – செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், கொடூரில் 8 கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு.

31/08/1985 – ஒரத்தி 6 புதிய கல்வெட்டுகள் படியெடுப்பு.

14/01/1986 – விழுப்புரம் 20 புதிய கல்வெட்டுகள் படியெடுப்பு. ‘தினமணி’

16/05/1987 – தென்ஆர்க்காடு மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டம், சிறுவந்தூரில் 3 கல்வெட்டுகள்.

08/08/1987 – பண்ருட்டி அருகே பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு. ‘தினமலர்’

21/11/1987 – தென்ஆர்க்காடு மாவட்டம், வானூர் வட்டம், தென்சிறுவள்ளூரில் பராந்தகன், முதலாம் இராசராசன், கோப்பெருஞ்சிங்கன் காலக்கல்வெட்டுகள் கண்டுபிடிப்பும் படியெடுப்பும்.

28/12/1987 – செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர்வட்டம், புத்திரன்கோட்டையில் 28 கல்வெட்டுகள் கண்டுபிடிப்பும் படியெடுப்பும். ‘தினமணி’

08/05/1989 – கற்கால பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு. ‘தினமணி’

31/05/1989 – 3000 ஆண்டுகளுக்கு முந்திய குகை சித்திரங்கள் கண்டுபிடிப்பு. ‘தேவி’

19/01/1990 – மதுராந்தகம் வட்டம், கடைமலைப்புத்தூரில் 1500 ஆண்டுகளுக்கு முந்தைய 1.5 மீட்டர் உயரமுள்ள இயக்கி, சாத்தனார் சிலைகள். மின்னல்சித்தாமூரில் 1400 ஆண்டுகளுக்கு முற்பட்ட பல்லவர் கால சாத்தனார், கொற்றவை சிலைகள் கண்டறிந்தது. ‘தினமணி’

05/07/1997 – 1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட அய்யனார் சிலை. ‘தினமணி’

26/08/1997 – பொலம்பாக்கத்தில் புதிய கல்வெட்டுகள். ‘தினமலர்’

02/09/1997 – காசி பயண கோட்டுருவச் சிற்பம். ‘தினமணி’

20.04.1998 – செய்யாறு வட்டம், கூழம்பந்தல் 1500 ஆண்டுகளுக்கு முன்னதான ஒரு மீட்டர் உயரத்திற்கும் மேலுள்ள சமணதீர்த்தங்கரர் சிலை.

22/04/1998 – செய்யாறு வட்டம், கூழம்பந்தலில் தெலுங்குச் சோழனான விஜயகண்ட கோபாலனின் (கி.பி.1270) கல்வெட்டு. ‘தினமலர்’

31/03/1999 – திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம் பெரணமல்லூரில் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய அய்யனார், கொற்றவைசிலைகள். ‘தினமலர்’

14/05/1999 – மதுராந்தகம் வட்டம், கொங்கரைகளத்தூரில் அரிய செய்திகளைக் கொண்ட இரண்டு பல்லவர்காலக் கல்வெட்டுகள். ‘தினமலர்’

03/04/2000 – காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் வட்டம் ஈசூரில் 1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட பல்லவர் கால திருமால் சிற்பம். நெற்குன்றத்தில் 1500 ஆண்டுகள் பழமையான சமணதீர்த்தங்கரர், வெண்மாலகரத்தில் கோப்பெருஞ்சிங்கன் காலத்திய திருமால், சீதேவி, பூதேவிசிலைகள் (சுமார் 700 ஆண்டுகளுக்கு முந்தியவை). ‘தினமலர்’

-/-/2001 – கொங்கரையில் இரண்டாம் இராசேந்திரன் கல்வெட்டு.

12/08/2001 – காஞ்சிபுரம் அருகே சிறுதாமூரில் சோழர் கால கல்வெட்டு சிற்பம். ‘தினமலர்’

விருதுகள்

சங்கமித்திரை -நாடகம் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு, 1982
வரலாற்றுக் கருவூலம் – தொல்பொருளியல் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு, 1984
தமிழக அரசு வழங்கிய மாநில நல்லாசிரியர் விருது (1988)
பல்கலைச் செம்மல் – சென்னை பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் (1985)
டாக்டர் பட்டம் – நியூயார்க் உலகப்பல்கலைக்கழகம் (1985)
திருக்குறள் நெறித் தோன்றல் – தமிழக அரசு (1985)
நாடக மாமணி – திண்டிவனம் தமிழ் இலக்கியப் பேரவை (1985)
பாரதி தமிழ்ப்பணிச் செல்வர் – ஸ்ரீராம் நிறுவனம் (1990)
பாரத ஸ்டேட் வங்கி வழங்கிய ‘இரகசியம்’ நாடகத்திற்கான முதல் பரிசு (1993)
இலக்கியச் சித்தர் – பண்ருட்டி எழுத்தாளர் சங்கம் (1995)
இலக்கியச் சிற்பி – புதுவை (1996)

புகைப்படங்கள்

தொடர்புக்கு

முனைவர்.தாம‌ரைக்க‌ண்ணன்

எண்-20,முதல் தெரு ,
காந்திநகர்,
அச்சிறுபாக்கம் அஞ்சல்,
மதுராந்தகம் தாலுகா,
காஞ்சிபுரம் மாவட்டம் – 603 301
தொலைபேசி எண்- 044 27522705
மின்னஞ்சல் – tk@thamaraikannan.com