செந்தமிழ்க் காத லோடு
தெய்வத்தின் பாலே அன்பும்
சந்தமுற் றமையும் நின்றன்
தகவினைப் போற்று கின்றேன்!
கந்தவேல் அருளால் மேன்மேற்
கல்வியும் பொருளும் பெற்று
முந்துறு புகழும் ஓங்க
நலமெலாம் முயங்கி வாழ்க!!
வாழ்த்து மடல் 10.5.1967
‘தினமணி சுடர்’ முன்னாள் ஆசிரியர் செந்தமிழ் வேதியர் சே. இராமாநுஜாசாரியார் அவர்கள்
….மேலும்திரு தாமரைக்கண்ணன், 1976 முதல் தினமணி சுடர் கட்டுரைகள் மூலம் எனக்கு அறிமுகமானவர்.
அக் கட்டுரைகளில் அவர் ஆய்வுத் திறன் மட்டுமின்றி,தெய்வ நெறியிலும் அதற்குத் துணை நின்ற பண்டைய அரசர்கள், வள்ளல்கள் திறந்தும் அவர் காட்டிய ஆர்வம் நன்கு வெளிப்பட்டது. தம் பெயருக்கேற்ப திருமால் நெறியில் அவர் கொண்ட தனித்த ஈடுபாடு என்னை அவர்பால் ஈர்த்தது தமிழும் வைணவமும் வளர, அவர் பல்லாண்டு வாழ்ந்து பணிபுரிய திருமால் திருவரருளை வேண்டிநிற்கிறேன். 26.03.1989
வண்ணத்தமிழால் வையம் ஆளும் இலக்கியச்சித்தர் டாக்டர் வலம்புரி ஜான் அவர்கள்
….மேலும்கவிஞராகவும் கலைஞராகவும் விளங்குகின்ற தாமரைக்கண்ணனின் ‘கம்பாஸ்பி’ என்கிற காவியம் இதோ என் கண்களைக் கெளரவப் படுத்துகிறது. புலவர் அவர்களின்
நாத நயனங்களில் நான் சூரிய சந்திரர்களைச் சந்தித்தேன். இவருக்கு வாய்த்திருக்கிற எழிற் கண்கள், கனவுகன் மிதக்கின்ற கற்பனை ஓசைகள் மாத்திரம் அல்ல; எதிர் காலத்தை எடை போட்டுச் சொல்லுகிற பேரண்டப் பெருவெளிகளும் ஆகும். ஆறே காட்சிகளில் மங்கலமாக மடிந்து போன கிரேக்கத்தை மனத்தேர் ஏற்றி மயங்க வைக்கிறார் என்றால், இவரது வித்தக விரல்கள் வீரவணக்கத்திற்கு உரியன அன்றோ?….. உயிரோவியமான காதலைக் கனிந்த தமிழில் காவியமாக்கி இருக்கிறார். புலவர் தாமரைக்கண்ணனன் தமிழ்நாடக உலகத்தின் புலர் காலைப் பொழுது! சீர்திருத்த சிறுகதையாளராய், நாட்டுக்கு நல்லதை உணர்த்தும் நாவல் ஆசிரியராய், குதூகலத்தோடு கொஞ்சும் குழந்தை எழுத்தாளராய் நன்மணி நாடக கால்ஊன்றி கனவில் தலை நிமிரும் அறிஞர் டாக்டர் தாமைரக்கண்ணன் அகிலத்தை வென்றுவாழ்க! ‘கம்பாஸ்பி’ அணித்துரை 28.7.1985
தொல்பொருள் துறையின் தன்னேரிலா பேரறிஞர் டாக்டர் இரா. நாகசாமி அவர்கள்
….மேலும்திரு. தாமரைக்கண்ணன் அவர்களை எம்மிடம் கல்வெட்டுப் பயிற்சி பெற வந்த நாள் முதல் அறிவேன் அன்றிலிருந்து இன்று வரை வரலாற்றில் இயல்பான ஆர்வத்துடன்