திரு தாமரைக்கண்ணன், 1976 முதல் தினமணி சுடர் கட்டுரைகள் மூலம் எனக்கு அறிமுகமானவர்.
அக் கட்டுரைகளில் அவர் ஆய்வுத் திறன் மட்டுமின்றி,தெய்வ நெறியிலும் அதற்குத் துணை நின்ற பண்டைய அரசர்கள், வள்ளல்கள் திறந்தும் அவர் காட்டிய ஆர்வம் நன்கு வெளிப்பட்டது. தம் பெயருக்கேற்ப திருமால் நெறியில் அவர் கொண்ட தனித்த ஈடுபாடு என்னை அவர்பால் ஈர்த்தது தமிழும் வைணவமும் வளர, அவர் பல்லாண்டு வாழ்ந்து பணிபுரிய திருமால் திருவரருளை வேண்டிநிற்கிறேன். 26.03.1989