திரு. தாமரைக்கண்ணன் அவர்களை எம்மிடம் கல்வெட்டுப் பயிற்சி பெற வந்த நாள் முதல் அறிவேன் அன்றிலிருந்து இன்று வரை வரலாற்றில் இயல்பான ஆர்வத்துடன்
பணியாற்றி வருகிறார். இவரது ஆர்வத்தால் தமிழ் வரலாற்றுக்கு மிகவும் போற்றத்தகும் சிறப்புச் செய்திகள் கிடைத்துள்ளன.
இவரது புதிய கண்டுபிடிப்புகளில் தமிழகமே பெருமைப்படக் கூடியது, சுமார் 1500 ஆண்டுகட்கும் முன்னரே ஒரு கோழிக்கு எடுத்த நினைவுக் கல்லை இவர் வெளிப்படுத்தியது ஆகும். அக்கோழியின் உருவத்துடன் பெயரும் பொறிக்கப்பட்டு இருந்த கல்வெட்டு இவரை பாராட்டிக் கொண்டிருக்கும். அது மட்டுமல்ல….. அதில் உள்ள சொற்றொடர் பண்டைய தமிழ் இலக்கணத்தில் இடம் பெற்றுள்ளது என்று இவர் ஆராய்ந்து வெளிப்படுத்தியது மேலும் சிறப்பாகும்.
இது மட்டுமல்ல….. இப்பகுதியில் கிடைத்த வீரகேரளன் காசு பற்றியும், ஒரத்தி எனும் ஊரில் தந்திவர்மன், கன்னரேதவன் ஆகிய அரசர் கல்வெட்டுகளும் கண்டுபிடித்து உதவியிருக்கிறார். ….. அரியவற்றைக் கண்டுபிடிப்பவராகவும், ஆராய்ச்சியாளராகவும் விளங்கும் இவர், நல்ல பேச்சாளர் பல நூல்களை யாத்துச் சிறந்து வருகிறார்….. இவர் எழுதியுள்ள ‘வரலாற்றுக் கருவூலம்’ நூலின் பயனாய் இப்பகுதியின் வரலாற்றை, புகழ் வாய்ந்த கோயில்களின் சிறப்பை, இதுகாறும் யாரும் அறியாத கோயில்கள் பற்றிய செய்தியைத் தெளிவாகவும் எளிமையாகவும் சான்றுகளுடன் அறிய அயலும். இவர் இது போன்ற பல நூல்களை எழுதிச் சிறப்படைய இறைவனை வேண்டுகிறேன். ‘வரலாற்றுக் கருவூலம்’ அணி ந் துரை 25.12.1984