தாமரைக்கண்ணன்

தாமரைக்கண்ணன்

பேரறிஞர் டாக்டர் சி. பாலசுப்பிரமணியனார் அவர்கள்

நண்பர், புலவர் தமிழ்கூறி நல்லுலகை நன்கறிந்து கொண்ட எழுத்தாளராவார். புலமை அழகும் கற்பனை வளமும் கருத்துச் செறிவும் இவர் எழுத்துகளில் மண்டிக் கிடக்கக்
காணலாம்…… புலமை நயம் பொருந்திய கட்டுரைகள், கல்வெட்டு இயல் தேர்ந்து கூறும் வரலாற்றினை வரையறை செய்யும் கட்டுரைகள், நாவல்கள், நாடகங்கள், சிறுகதைகள் முதலான துறைகளில் இவர் எழுத்துசாதனை புரிந்துள்ளது. ஆசிரியர் கம்பராமாணத்தில் ஊறித் திளைத்தவராகத் தெரிகிறார்….. இவ்வாறாகப் பல பல நோக்குகளிலும் சிறந்த நாடக ஆசிரியராக மலர்ந்துள்ள புலவர் அவர்களை வாழ்த்துகிறேன்! இவர் மேலும் பல நல்ல நாடகங்களைத் தந்துதவி நலம் சேர்ப்பாராக! 1.8.1985

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *