தாமரைக்கண்ணன்

தாமரைக்கண்ணன்

காளமேகக் கவிச்சுடர்பெருங்கவிக்கோ டாக்டர் வா.மு.சேதுராமன் அவர்கள்

பல்கலைச் செம்மல் பைந்தமிழ்ப் புலவர்கோ நல்கலைக் குரிசில் நற்றமிழ்ப் பெட்டகத்தான் எங்கும் தமிழோங்க எழுச்சிப் பணிபுரிவோன் தங்க மணமுடையோன் தாமரைக் கண்ணனென்பான்

எழுத்து வேந்தனிவன் ஏரார்ந்த தமிழாசான்! அழுத்தமான சிந்தனையாளன்! அவனியிலே வாழியரோ! நாடழிந்த போனாலுமிவன் நடையழிந்து போகாதே! ஏடெழுந்த இலனெழுத்தோ என்றென்றும் வாழியரோ!

முறுக்குடன் வளர்ந்த உடலோடு மாசில் முன்னேறத் துடிமனம் துள்ளும் தறுக்குடன் பிறர்செய்யும் தீமைகள் சடிந்து சால்பெனக் கரைபுரள் வெள்ளம்

கறுத்தநெஞ் சுளவஞ்சர் கதிகலங்கிடச் செய்து கனல்போலத் தீய்ப்பாரே கள்ளம் கிறுக்கர்கள் சொல்கின்ற வார்த்தைகள் மதியாமல் கிளர்ந்தெழு அரிமாபோல் உள்ளம்!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *