நண்பர் தாமரைக்கண்ணனார் ஒரு நல்லாசிரியர்; பலதுறைப் புலமை பெற்று மிளிர்பவர்; படைப்பாற்றல் மிக்க பல்கலைக்குரிசில்! சொல்வரவு சான்ற தமிழுக்குத்
துறை தோறும் புது வரவு பெருக்கி வரும் புகழாளர்! இவரின் படைப்புகள் வளர்கின்ற இளைய நெஞ்சம் முதல் அறிஞர்களின் ஆராய்ச்சி உள்ளம் வரை இடம் பெற்று விளங்கும் திறங் கொண்டு திகழ்பவை! பல்துறைப் பணிகளிலும் நாடகப் படைப்புகள் இவர் புலமைப் புகழுக்கு ஏணியாகும்! இவர் தமிழக அரசின் 1982-ஆம் ஆண்டின் தலை சிறந்த நாடகப் பேராசியர் என்ற பாராட்டுதலையும் பெற்றுள்ளார். இந்த நாடகத்தில் ஆசிரியரின் கைவண்ணம் உள்ளத்தைத் தொடுகின்ற நிகழ்ச்சிகளை மேலும் கவினுறச் செய்கிறது. எளிமையும் இனிமையும் குலவும் தமிழ் நடை எங்கும் சுடர் விடுகிறது….. தாமரையின் பணி மேலும் சிறக்கவும் புதிய பொன்னேடுகள் பல அவர் புகழுக்குச் சேரவும் எனது உளங்கனிந்த நல் வாழத்துக்கள்! 25.7.1985